விளையாட்டு

உலககோப்பை ஹாக்கி போட்டி: அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது

Published On 2023-01-20 13:51 GMT   |   Update On 2023-01-20 13:51 GMT
  • ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர்
  • குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா முதல் இடமும், அர்ஜெண்டினா 2வது இடமும் பெற்றன.

புவனேஸ்வர்:

15-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெற்ற குரூப் ஏ லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணி வீரர்களும்  ஆக்ரோஷமாக முன்னேறினர். 

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தனர். இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 4 கோல்கள் அடித்தன.  எனவே,  5-5 என போட்டி டிராவில் முடிந்தது.

இந்த போட்டி முடிவில் குரூப் ஏ பிரிவில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் அடிப்படையில் குரூப் ஏவில் ஆஸ்திரேலியா முதல் இடமும், அர்ஜெண்டினா 2வது இடமும், பிரான்ஸ் 3வது இடமும், தென் ஆப்பிரிக்கா 4வது இடமும் பெற்றன.

Tags:    

Similar News