ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மோகன் பகான் அணி சாம்பியன் - மம்தா பானர்ஜி வாழ்த்து
- சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
- 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
11வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் மற்றும் பெங்களூரு எப்.சி. அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இறுதிப்போட்டியின் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன. இதனால் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது மோகன் பகான் அணி ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா தான் கன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.