விளையாட்டு
null

ISSF உலகக் கோப்பை: பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை

Published On 2025-09-13 16:19 IST   |   Update On 2025-09-13 16:32:00 IST
  • ஈஷாவின் முதல் உலகக் கோப்பை தங்கம் இதுவாகும்.
  • இந்த பதங்கத்தை வென்றதன் மூலம் இந்தியா, பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது.

நிங்போவில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான தனிநபர் 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் இஷா சிங் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஈஷா 242.6 புள்ளிகள் பெற்று, பரபரப்பான இறுதிப் போட்டியில் சீனாவின் யாவோவை 0.1 என்ற கணக்கில் வீழ்த்தினார். நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவின் ஓ யெஜின் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ஈஷாவின் முதல் உலகக் கோப்பை தங்கம் இதுவாகும். இந்த பதங்கத்தை வென்றதன் மூலம் இந்தியா, பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. தங்கப் பதக்கத்தை வென்ற மற்ற நான்கு நாடுகளுடன் இந்தியா இணைந்தது.

Tags:    

Similar News