விளையாட்டு
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
- இதில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.
ஷிம்கென்ட்:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
அவர் 253.6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.