கிரிக்கெட் (Cricket)
2ஆவது போட்டியிலும் வெற்றி: வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்
- வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்கள் சேர்த்தது.
- வங்கதேச அணியால் 135 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
வங்கதேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர் அலிக் அதானாஸ் 33 பந்தில் 52 ரன்களும், ஷாய் ஹோப் 36 பந்தில் 55 ரன்களும் விளாசினர்.
பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 எனக் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற்றுள்ளது. ரொமாரியோ ஷெப்பர்டு, அகீல் ஹொசைன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.