நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 205 ரன்களில் ஆல் அவுட்
- ஜான் கேம்பல், பிராண்டன் கிங் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது.
- நியூசிலாந்து தரப்பில் பிளேர் டிக்னா் 4 விக்கெட்டும், மிச்சேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
வெல்லிங்டன்:
நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது டெஸ்ட் வெல்லிங்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜான் கேம்பல், பிராண்டன் கிங் ஆகியோர் களமிறங்கினர்.
இரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது. கிங் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஹாட்ஜ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேம்பல் 44 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து கேப்டன் ரோஸ்டன் சேஸ் மற்றும் சாய் ஹோப் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 60 ரன்கள் சேர்த்தது. இதில் சாய் ஹோப் 48 ரன்னிலும் சேஸ் 29 ரன்னிலும் வெளியேறினர்.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 75 ஓவர்களில் 205 ரன்னில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பிளேர் டிக்னா் 4 விக்கெட்டும், மிச்சேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை ஆடியது. இன்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன் எடுத்து இருந்தது.