கிரிக்கெட் (Cricket)

வீடியோ: ஐபிஎல் அணியை வாங்கும் எண்ணம் உள்ளதா? சல்மான் கான் கொடுத்த நச் பதில்

Published On 2025-08-11 17:23 IST   |   Update On 2025-08-11 17:23:00 IST
  • ஐபிஎல் தொடர் 2008-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற டென்னிஸ் பந்து T10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார்.

ஐபிஎல் தொடர் 2008-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 18 சீசன் நடந்து முடிந்துள்ளது. இதில் மும்பை, சென்னை அணிகள் தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.அதற்கு அடுத்தப்படியாக கொல்கத்தா 3 முறை கோப்பை வென்றுள்ளது.

மற்ற அணிகளான ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் ஜார்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜாராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றி உள்ளது. அடுத்த சீசனுக்கான வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு என பல விஷயங்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) என்ற டென்னிஸ் பந்து T10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது சல்மான் கானிடம் ஐபிஎல் அணிகளை வாங்கும் எண்ணம் உள்ளாதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சல்மான் கான் கூறியதாவது:-

ஐபிஎல் அணியை வாங்க எனக்கு இப்போது வயதாகிவிட்டது. 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் அணியை வாங்குவதற்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த நேரத்தில் நான் அதை ஏற்கவில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்று பதிலளித்தார்.

Tags:    

Similar News