கிரிக்கெட் (Cricket)

வீடியோ: 2 முறை Retired hurt.. Stretcher-ல் கொண்டு சென்ற பின்பும் அணிக்காக போராடி சதம் விளாசிய மேத்யூஸ்

Published On 2025-04-10 17:46 IST   |   Update On 2025-04-10 17:46:00 IST
  • தசைப்பிடிப்பு காரணமாக 39-வது ஓவரின் போது 95 ரன்னில் Retired hurt ஆகி மேத்யூஸ் வெளியேறினார்.
  • இதனையடுத்து 41 ஓவரில் ஒரு பந்தை மட்டும் சந்தித்து 99 ரன்களுடன் மீண்டும் Retired hurt ஆகி வெளியேறினார்.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 45 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மேத்யூஸ் தசைப்பிடிப்பு காரணமாக 39-வது ஓவரின் போது 95 ரன்னில் Retired hurt ஆகி வெளியேறினார்.

இதனையடுத்து 41 ஓவர் 3 பந்தில் களமிறங்கிய அவர், அந்த பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அடித்த உடனே தசைப்பிடிப்பு காரணமாக கீழே விழுந்தார். நடக்க முடியாமல் இருந்த அவரை Stretcher-ல் கொண்டு சென்றனர். 4-வது பந்தில் 9-வது விக்கெட் இழந்ததால் மீண்டும் மேத்யூஸ் களமிறங்க வேண்டி இருந்தது. இதனால் அணியின் வெற்றிக்காக மீண்டும் களமிறங்கிய அவர் சதம் விளாசி அசத்தினார். அவர் 113 பந்தில் 114 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

எனினும் அவரால் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. 11 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது.

உடல் மோசமாக இருந்தாலும் அணிக்காக விளையாடிய விதம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

Tags:    

Similar News