கிரிக்கெட் (Cricket)
டிஎன்பிஎல் குவாலிபையர்-2: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிராக திண்டுக்கல் பந்து வீச்சு தேர்வு
- குவாலிபையர்-1ல் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தோல்வியடைந்திருந்தது.
- எலிமினேட்டரில் திண்டுக்கல் அணி திருச்சியை வீழ்த்தியிருந்தது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் குவாலிபையர்-2 திண்டுக்கல்லில் நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் திண்டுக்கல் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
குவாலிபையர்-1ல் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் திருப்பூர் அணியிடம் தோல்வியடைந்திருந்தது. எலிமினேட்டர் சுற்றில் திருச்சி அணியை திண்டுக்கல் வீழ்த்தியிருந்தது.