கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: சுப்மன் கில் நெகிழ்ச்சி பதிவு

Published On 2025-09-15 15:34 IST   |   Update On 2025-09-15 15:34:00 IST
  • போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம்.
  • நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர்.

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே அடித்தது.

பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் நேற்றைய ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடி தீர்த்தனர்.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து இந்திய துணை கேப்டன் சுப்மன் கில் தனது எக்ஸ் பக்கத்தில் உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.

அதில், "இன்றைய வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. இந்தியாவின் உணர்வு களத்திலும் வெளியிலும் வாழ்கிறது. ஜெய் ஹிந்த்!" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News