null
வீடியோ: ஒரே டென்ஷன்..டென்ஷன்.. நிதிஷ் குமார் சதம் குறித்து அவரது தந்தை நெகிழ்ச்சி
- இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது.
- உண்மையில் இந்த நாள் ஒரு சிறப்பான நாள்.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 140 ரன்களும் லபுசேன் 72 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. 2-வது நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பண்ட் 28 ரன்களிலும் ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ்குமார் - வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் சிறுது நேரம் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் நிதானமாக விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பும்ரா டக் அவுட்டாகி வெளியேறினார். இந்நிலையில் பொறுப்புடன் விளையாடி வந்த நிதிஷ்குமார் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
3-ம் நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ்குமார் 105 ரன்களுடனும் சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நிதிஷ் குமாரின் தந்தையிடம் சதம் குறித்து வர்ணனையாளர் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பினார்.
அதற்கு நிதிஷ் குமாரின் தந்தை கூறியதாவது:-
எங்கள் குடும்பத்திற்கு இது சிறப்பு வாய்ந்த தினம். இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. 14-15 வயது முதலே நன்றாக ஆடி வந்தான். இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடுகிறான். உண்மையில் இந்த நாள் ஒரு சிறப்பான நாள், சிறப்பான உணர்வைத் தந்த நாள். என்றார்.
உடனே கில்கிறிஸ்ட், 99 ரன்களில் இருந்த போது உங்கள் உணர்வுகள் என்ன என்றார்.. அதற்கு நிதிஷின் தந்தை, "ஒரே டென்ஷன் டென்ஷன் டென்ஷன் என்றார். ஒரு விக்கெட்தான் இருந்தது, நல்ல வேளை சிராஜ் நின்றார்" என்றார் நெகிழ்ச்சியுடன்