கிரிக்கெட் (Cricket)

இந்திய ஜெர்சி எல்லாப் பிரச்சனைகளையும் ஒதுக்கி வைத்துவிடும்- ஸ்மிருதி மந்தனா

Published On 2025-12-11 15:03 IST   |   Update On 2025-12-11 15:03:00 IST
  • கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை.
  • ஒரு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே, பேட்டிங் மீதான அந்த வெறி எப்போதும் இருந்தது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் மந்தனா முக்கிய பங்காற்றினார்.

இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து இருவரின் திருமணம் கடந்த 23-ம் தேதி நடப்பதாக இருந்த நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையே மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. இதைதொடர்ந்து பலாஸ் உடன் இருக்கும் திருமண புகைப்படங்களை மந்தனா நீக்கினார்.

அதனை தொடர்ந்து, திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா, தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

இந்நிலையில் கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை என ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை. இந்திய ஜெர்சியை அணிவதுதான் எங்களை இயக்கும் உந்துசக்தி. எல்லாப் பிரச்சனைகளையும் ஒதுக்கி வைத்துவிடும். அந்த ஒரு எண்ணமே வாழ்க்கையில் கவனம் செலுத்த உதவுகிறது. ஒரு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே, பேட்டிங் மீதான அந்த வெறி எப்போதும் இருந்தது. அதை யாரும் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் என் மனதில், நான் எப்போதும் ஒரு உலக சாம்பியன் என்று அழைக்கப்பட வேண்டும் என்றே விரும்பினேன்.

என ஸ்மிருதி மந்தனா கூறினார்.

Tags:    

Similar News