null
இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக அரங்கேறிய அரிய நிகழ்வு
- ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஹாரி ப்ரூக் 158 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.
- ஹாரி ப்ரூக்-ஸ்மித் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து- இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் (269), ஜடேஜா (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் 22 ரன்கள் எடுத்த நிலையிலும், பென் ஸ்டோக்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் சிராஜ் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இதனையடுத்து 6-வது விக்கெட்டுக்கு ப்ரூக் உடன் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர்நது விளையாடிய இருவரும் 150 ரன்களுக்கு மேல் குவித்தனர். இவர்களை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.
இந்நிலையில் ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஹாரி ப்ரூக் 158 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பல சாதனை பட்டியலில் இந்த பாட்னர்ஷிப் இடம் பெற்றுள்ளது.
அதன்படி இங்கிலாந்துக்கான 6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த 2-வது ஜோடி என்ற சாதனையை இருவரும் படைத்துள்ளனர்.
அந்த பட்டியல்:-
399: பென் ஸ்டோக்ஸ் & ஜானி பேர்ஸ்டோ vs ?? SA, கேப்டவுன் - 2016
303: ஹாரி புரூக் & ஜேமி ஸ்மித் vs ?? IND, பர்மிங்காம் - இன்று
281: கிரஹாம் தோர்ப் & ஆண்ட்ரூ பிளின்டாஃப் vs ?? NZ, கிறைஸ்ட்சர்ச் - 2002
இதனையடுத்து ஒரு இன்னிங்சில் குறைந்த பட்சம் 3 டக் அவுட் & இரண்டு 150-க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் எடுத்த நிகழ்வில் இது 5-வது முறையாகும். மேலும் முதல் 7 பேரில் 3 டக் அவுட் & இரண்டு 150-க்கும் மேற்பட்ட ஸ்கோர் எடுத்த நிகழ்வு இதுவே முதல் முறை ஆகும். இந்த போட்டியில் மொத்தமாக இங்கிலாந்து வீரர்கள் 6 பேர் டக் அவுட் அவுட் ஆகியுள்ளது. இதன் மூலம் ஒரு இன்னிங்சில் இங்கிலாந்து வீரர்கள் 5 பேருக்கு மேல் அவுட் ஆவது இது 5-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 3 டக் அவுட்கள் & இரண்டு 150-க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள்:-
ENG vs AUS, மெல்போர்ன், 1911/12
ENG vs PAK, லார்ட்ஸ், 2010
SA vs AUS, பெர்த் 2012/13
AFG vs ZIM, புலவாயோ, 2024
ENG vs IND, எட்ஜ்பாஸ்டன், 2025