கிரிக்கெட் (Cricket)

டி20 கிரிக்கெட்: 100 விக்கெட் ஆர்வத்தில் ஹர்திக் பாண்ட்யா

Published On 2025-12-11 13:22 IST   |   Update On 2025-12-11 13:22:00 IST
  • பும்ரா 81 போட்டியில் 101 விக்கெட்டை எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.
  • அர்ஷ் தீவ் சிங் 107 விக்கெட்டுகளை (69 போட்டி) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.

நியூ சண்டிகர்:

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2-வது ஆட்டம் நியூ சண்டிகரில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

கட்டாக்கில் நடைபெற்ற முதல் போட்டியில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 74 ரன்னில் சுருட்டி 101 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்யும் வேட்கையில் இருக்கிறது.

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா 100 விக்கெட்டை வீழ்த்தும் ஆர்வத்தில் உள்ளார். அவர் 121 போட்டிகள் விளையாடி 99 விக்கெட் எடுத்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் ஒரு விக்கெட் கைப்பற்றினால் அவர் 100-வது விக்கெட்டை தொடுவார்.

100-வது விக்கெட்டை எடுக்கும் 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெறுவார். கடந்த போட்டியின் போது பும்ரா 100 விக்கெட்டை தொட்டார். அவர் 81 போட்டியில் 101 விக்கெட்டை எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். அர்ஷ் தீவ் சிங் 107 விக்கெட்டுகளை (69 போட்டி) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.

முதல் 20 ஓவர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் அதிரடியை வெளிப்படுத்தி அரை சதத்தை பதிவு செய்தார். அதோடு ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

Tags:    

Similar News