கிரிக்கெட் (Cricket)
பென்னெட் அதிரடி: இலங்கை வெற்றிபெற 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே
- டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் ரன்கள் எடுத்தது.
ஹராரே:
இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னெட் அதிரடியாக ஆடினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
பிரியன் பென்னெட் 57 பந்துகளில் 12 பவுண்டரி உள்பட 81 ரன்கள் குவித்தார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.