கிரிக்கெட் (Cricket)
தென் ஆப்பிரிக்க வீரர் சுப்ராயன் பந்துவீச ஐ.சி.சி. அனுமதி
- சுப்ராயன் பந்துவீசுவதில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுப்பப்பட்டது.
- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் அவரது பந்துவீச்சு பரிசோதனை செய்யப்பட்டது.
துபாய்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பிரேனலன் சுப்ராயன். 31 வயதான அவர் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.
அப்போது சுப்ராயன் பந்துவீசுவதில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் அவரது பந்துவீச்சு பரிசோதனை செய்யப்பட்டது. சுயபரிசோதனை பந்துவீச்சு மதிப்பீடு என்ற பெயரில் இந்த சோதனைமேற்கொள்ளப்பட்டது.
அதன்படி அவர் பந்துவீசும்போது முழங்கை 15 டிகிரி அளவுக்குள் இருப்பதாகவும், அது ஐ.சி.சி.-யின் பந்துவீச்சு விதிமுறைக்கு உட்பட்டு இருப்பதாகவும் அறிக்கை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுப்ராயன் போட்டிகளில் பங்கேற்க ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அனுமதி அளித்துள்ளது.