கிரிக்கெட் (Cricket)

உலக கோப்பை முடிந்தவுடன் மந்தனாவுக்கு டும்.. டும்.. டும்..

Published On 2025-11-01 12:20 IST   |   Update On 2025-11-01 12:20:00 IST
  • ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார்.
  • ஒருநாள் உலக கோப்பை தொடரில் மந்தனா 2 அரைசதம் 1 சதம் விளாசியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மும்பையை சேர்ந்த 29 வயதாகும் இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவருக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இதற்கிடையே ஸ்மிருதி மந்தனாவும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த பலாஷ் முச்சல் இசையமைப்பாளராக உள்ளார். சில ஆல்பங்களையும் இவர் வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில் ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சல் ஜோடிக்கு நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள ஸ்மிருதியின் சொந்த ஊரான சங்லியில் திருமண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் மந்தனா 2 அரைசதம் 1 சதம் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News