ஐசிசி தரவரிசை: தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் அசத்தும் ஸ்மிருதி மந்தனா
- தரவரிசைப் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
- பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி சர்மா 3வது இடத்துக்கு முன்னேறினார்.
லண்டன்:
மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது. அதில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 809 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
தற்போது நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிகளில் கடைசி இரு ஆட்டங்களிலும் மந்தனா அசத்தலாக ஆடி அரை சதங்கள் விளாசினார்.
2வது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் நாட் சீவர்பிரன்ட் உள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை ஆலிசா ஹீலி ஒரு நிலை உயர்ந்து 3ம் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 3 நிலை உயர்ந்து 15-ம் இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 3 நிலை உயர்ந்து 669 புள்ளிகளுடன் 3ம் இடத்துக்கு சென்றுள்ளார். இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் 778 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். ஆஸி வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் 686 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் நீடிக்கிறார்.
இந்திய வீராங்கனை ஸ்நே ராணா 20-வது இடத்தில் உள்ளார்.