தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: 170 ரன்னில் சுருண்டு ஜிம்பாப்வே பாலோ-ஆன்
- 43 ஓவர்கள் மட்டுமே விளையாடிய ஜிம்பாப்வே 170 ரன்னில் சுருண்டது.
- சீன் வில்லியம்ஸ் மட்டும் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே இடையிலான 2-ஆவது டெஸ்ட் நேற்று புலவாயோவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா கேப்டன் வியான் முல்டரின் முச்சதத்தால் (367 நாட்அவுட்) 5 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் குவித்து, இன்றைய 2அவது நாள் 2ஆவது செசன்ஸ் போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
பின்னர் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே 170 ரன்னில் சுருண்டது. 456 ரன்கள் பின்தங்கியுள்ளதால் தென்ஆப்பிரிக்கா பாலோ-ஆன் கொடுத்துள்ளது. இதனால ஜிம்பாப்வே தொடர்ந்து 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய இருக்கிறது.
சீன் வில்லியம்ஸ் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் அடித்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பிரேனெலன் சுப்ராயன் 4 விக்கெட்டும் முல்டர் மற்றும் கொடி யூசுப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.