டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிவேக சதம்: சாதனை படைத்த சால்ட்
- முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 304 ரன்களைக் குவித்தது.
- அந்த அணியின் பிலிப் சால்ட் 39 பந்தில் சதமடித்து அசத்தினார்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.
முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் 83 ரன்னில் வெளியேறினார். அவர் 30 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 158 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 146 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை பிலிப் சால்ட் படைத்தார். இவர் 39 பந்தில் சதமடித்தார்.
ஏற்கனவே, லியாம் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் சதமடித்திருந்தார். அந்த சாதனையை பிலிப் சால்ட் முறியடித்துள்ளார்.