கிரிக்கெட் (Cricket)
முதல் டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்காவிடம் சரணடைந்த பாகிஸ்தான்
- முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 194 ரன்கள் எடுத்தது.
- இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் 139 ரன்னில் சுருண்டது.
ராவல்பிண்டி:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 18.1 ஓவரில் 139 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 55 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது போட்டி லாகூரில் நாளை மறுநாள் நடக்கிறது.