கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி கைவிடப்பட்டது

Published On 2025-10-03 15:40 IST   |   Update On 2025-10-03 15:40:00 IST
  • நியூசிலாந்து- ஆஸ்திரேலியாஅணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது
  • இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

நியூசிலாந்து- ஆஸ்திரேலிய அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. 3-வது ஓவரின் போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

Tags:    

Similar News