கிரிக்கெட் (Cricket)

டி20 தொடரை வென்ற இங்கிலாந்துக்கு ஒருநாள் தொடரை வென்று பதிலடி கொடுத்த நியூசிலாந்து

Published On 2025-10-29 12:39 IST   |   Update On 2025-10-29 12:39:00 IST
  • முதலில் நடந்த டி20 தொடரில் 2 போட்டிகள் மழையால் தடைப்பட்டது.
  • ஒரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதால் 1-0 என்ற கணக்கில் டி20 தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டி20 தொடரில் 2 போட்டிகள் மழையால் தடைப்பட்டது. ஒரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரை இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனையடுத்து இரு அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 36 ஓவரில் 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஓவர்டென் 42 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 33.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 56, ரவீர்ந்திரா 54 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி வருகிற நவம்பர் 1-ந் தேதி நடக்கவுள்ளது.

Tags:    

Similar News