கிரிக்கெட் (Cricket)
null

டெஸ்டில் அதிக ரன்: தெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியுமா? ஜோ ரூட் பதில்

Published On 2025-07-27 12:30 IST   |   Update On 2025-07-27 16:25:00 IST
  • தெண்டுல்கர் 2013-ம் ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார்.
  • ஜோரூட் 2012-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகம் ஆனார்.

இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோரூட். அவர் நேற்று முன்தினம் டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 2-வது இடத்தை பிடித்தார். ரிக்கி பாண்டிங்கை முந்தினார். தெண்டுல்கர் 15,921 ரன் களுடன் (200 டெஸ்ட்) முதல் இடத்திலும், ஜோரூட் 13,409 ரன்னுடன் (157 போட்டி) 2-வது இடத்திலும் உள்ளார்.

இந்த நிலையில் தெண்டுல்கர் சாதனையை முறியடிக்க முடியுமா? என்பதற்கு ஜோரூட் அளித்த பதில் வருமாறு:-

கிரிக்கெட்டின் சிறந்த வீரர் சச்சின் தெண்டுல்கர். அவர் சாதித்த அனைத்து விஷயங்களும் நம்ப முடியாதவை. நான் பிறப்பதற்கு முன்பே அவர் டெஸ்டில் அறிமுகமானார்.

சிறு வயதில் இருந்தே அவரது ஆட்டத்தை பார்த்து பின்பற்றி வருகிறேன். அவருக்கு எதிராக ஒரு டெஸ்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றது சிறந்ததாகும். அவர் பேட்டிங் செய்ய வரும்போது முழு ரசிகர்கள் கூட்டமும் ஆராவரம் செய்தது. அதை பார்ப்பது வினோதமாக இருந்தது. தெண்டுல்கர் சாதனையை முறியடிப்பதில் நான் கவனம் செலுத்த போகும் ஒன்றல்ல.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தெண்டுல்கர் சாதனையை முறியடிக்க ஜோ ரூட் இன்னும் 2,512 ரன் தேவை. தெண்டுல்கர் 2013-ம் ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார். ஜோரூட் 2012-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகம் ஆனார்.

Tags:    

Similar News