null
ODI-யில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம்: சச்சின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் தெண்டுல்கர் 70 இன்னிங்சில் 9 சதம் அடித்துள்ளார்.
- ரோகித் சர்மா 49 இன்னிங்சில் 9 சதம் அடித்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 121 (125 பந்துகள்), 74 (81 பந்துகள்) ரன்கள் அடிக்க, இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஜோடி 2அவது விக்கெட்டுக்கு 170 பந்தில் 168 ரன்கள் குவித்தது.
இதன்மூலம் பல்வேறு சாதனைகள் படைத்தன. குறிப்பாக சதம் விளாசிய ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்தார். அவற்றில் முக்கியமானது, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் சாதனையை சமன் செய்து, அவரை முந்தியது.
சச்சின் தெண்டுல்கர் 71 போட்டியில் 70 இன்னிங்சில் பேட்டிங் செய்து 9 சதங்கள் அடித்துள்ளார். ரோகித் சர்மா 49 போட்டிகளில், 49 இன்னிங்சில் 9 சதம் அடித்துள்ளார். இன்னிங்ஸ் அடிப்படையில் சச்சின் தெண்டுல்கரை முந்தியுள்ளார். விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 53 போட்டிகளில், 53 இன்னிங்சில் விளையாடி 8 சதங்கள் அடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் டெஸ்மாண்ட் கெய்ன்ஸ் 64 இன்னிங்சில் 6 சதம் அடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா வீரர் டு பிளிஸ்சிஸ் 21 இன்னிங்சில் 5 சதம் அடித்துள்ளார்.
அத்துடன் ஆஸ்திரேலியா மண்ணில் இது அவருடைய 6ஆவது சதம் ஆகும். இதன்மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக சதம் விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக விராட் கோலி இலங்கைக்கு எதிராக 10 சதங்கள் விளாசி சர்வதேச அளவில் அனைத்து அணிகளுக்கும் எதிராக முதல் இடத்தில் உள்ளனார்.