கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக் கோப்பை: மிதாலி ராஜ் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா

Published On 2025-11-02 21:30 IST   |   Update On 2025-11-02 21:30:00 IST
  • முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.
  • ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

நவி மும்பை:

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன.

முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை முறியடித்தார். நடப்பு தொடரில் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி வருகிறார்.

ஸ்மிருதி மந்தனா இறுதிப்போட்டியில் 21 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஏற்கனவே, மிதாலி ராஜ் 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தொடரில் 409 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது ஸ்மிருதி மந்தனா அந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஸ்மிருதி மந்தனா 9 இன்னிங்சில் 410 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News