கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: 222 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட்

Published On 2025-11-01 10:48 IST   |   Update On 2025-11-01 10:48:00 IST
  • இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
  • நியூசிலாந்து தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டும் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

வெல்லிங்டன்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என இங்கிலாந்து கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து நடந்து வரும் ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளின் முடிவில் 2-0 என நியூசிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சேல் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் முதல் 4 வீரர்களான ஜேமி ஸ்மித் 5, டக்கெட் 8, ரூட் 2, ஹாரி ப்ரூக் 6 ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்த வந்த ஜேக்கப் பெத்தேல் 11,

இதனையடுத்து சாம் கரண்- பட்லர் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தது. சாம் கரண் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் பட்லர் 38 ரன்னில் அவுட் ஆனார்.

கடைசி வரை போராடிய ஜேமி ஓவர்டன் அரை சதம் கடந்து அசத்தினார். அவர் 68 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 222 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

நியூசிலாந்து தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டும் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News