கிரிக்கெட் (Cricket)
null

தடுமாறும் ஜாம்பவான்கள் - விராட் கோலியை தொடர்ந்து டக் அவுட்டான கேன் வில்லியம்சன்

Published On 2025-10-26 12:29 IST   |   Update On 2025-10-26 12:31:00 IST
  • முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 35.2 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • தனி ஒருவனாக போராடிய கேப்டன் ஹாரி புரூக் 101 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அவுட்டானார்.

இங்கிலாந்து அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 35.2 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனி ஒருவனாக போராடிய கேப்டன் ஹாரி புரூக் 101 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அவுட்டானார்.

224 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தற்போது வரை 30 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போட்டியில் களமிறங்கிய கேன் வில்லியம்சன் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். தனது 15 வருட ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக கேன் வில்லியம்சன் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலியா தொடரில் விராட் கோலி முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News