ஐ.பி.எல்.(IPL)

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் கொண்டாட்டம் வேண்டாம் -சுனில் கவாஸ்கர்

Published On 2025-05-14 15:56 IST   |   Update On 2025-05-14 15:56:00 IST
  • தீவிரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர்.
  • ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்குகிறது.

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது. ஐ.பி.எல். தொடர் மீண்டும் தொடங்குவதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த எஞ்சியுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் டி.ஜே. இசை மற்றும் சியர் லீடர்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது அவற்றில் பாடல்கள், DJ, பெண்கள் நடனம் என எதுவும் இருக்கக் கூடாது என விரும்புகிறேன். தீவிரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐபிஎல் போட்டிகளில் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

என கவாஸ்கர் கூறினார்.

Tags:    

Similar News