ஐ.பி.எல்.(IPL)
null

ஆர்சிபி-யின் பரிதாபம்: சின்னசாமி மைதானத்தில் மோசமான சாதனை படைத்த பெங்களூரு

Published On 2025-04-03 15:46 IST   |   Update On 2025-04-03 15:57:00 IST
  • குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி தோல்வியடைந்தது.
  • இந்த சீசனில் ஆர்சிபி அணி தனது முதல் தோல்வியை தழுவியது.

ஐபிஎல் தொடரின் 14-வது லீக் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூரு- குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய பெங்களூரு 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்தனர். குஜராத்துக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 3, சாய் கிசோர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அடுத்த விளையாடிய குஜராத் அணி 17.5 ஓவரில் 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

இதன் மூலம் விக்கெட்டுகள் அடிப்படையில் குஜராத் தங்களது இரண்டாவது பெரிய வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இதற்கு முன் 2023-ல் ராஜஸ்தானுக்கு எதிராக ஜெய்ப்பூரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது அந்த அணியின் முதல் பெரிய வெற்றியாகும்.

மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு இந்த வருடத்தில் முதல் தோல்வியை பதிவு செய்தது. இந்த தோல்வியையும் சேர்த்து தங்களது சொந்த மைதானமானத்தில் 44-வது தோல்வியை பெங்களூரு அணி பதிவு செய்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக தோல்விகளைப் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை பெங்களூரு சமன் செய்துள்ளது.

இதற்கு முன் டெல்லி அணியும் தங்களது சொந்த ஊரில் உள்ள டெல்லி மைதானத்தில் 44 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

Tags:    

Similar News