ஐ.பி.எல்.(IPL)

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்து மொயீன் அலி விலகல்

Published On 2025-05-15 14:48 IST   |   Update On 2025-05-15 14:48:00 IST
  • புள்ளிகளில் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.
  • கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை எதிர்பார்க்க முடியும்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

இதனால் பாகிஸ்தான் Loc பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. மேலும், இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய பகுதிகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா முறியடித்து பதிலடியும் கொடுத்தது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 8ஆம் தேதி தரம்சாலாவில் பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பத்திரமாக சொந்த நாடு திரும்பினர்.

பின்னர் இந்தியா- பாகிஸ்தான் இடையில் கடந்த 10ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி மீண்டும் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா திரும்பி வருகிறார்கள். பிளேஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இல்லாத அணிகள் இன்னும் 2 முதல் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டியுள்ளது. இதனால் ஆடும் லெவனில் இடம் கிடைக்காத வெளிநாட்டு வீரர்கள் உள்பட சில வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் இணைய ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சொந்த காரணத்தை காட்டி விலக இருப்பதாக தெரிகிறது.

அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் மொயீன் அலி, சொந்த காரணத்திற்காக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணியின் மெக்கர்க் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

புள்ளிகள் பட்டியலில் கேகேஆர் 12 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 6ஆவது இடத்தில் உள்ளது. 17ஆம் தேதி ஆர்சிபியையும், 15ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியையும் எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டு பேட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை தேட முடியும்.

Tags:    

Similar News