ஐ.பி.எல்.(IPL)
இறுதிப்போட்டியில் 2-வது முறை ஆட்ட நாயகன் விருது.. முதல் வீரராக குர்ணால் பாண்ட்யா சாதனை
- பெங்களூரு அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல குர்ணால் பாண்ட்யா முக்கிய பங்கு வகித்தார்.
- 2017-ல் மும்பை கோப்பையை வென்றபோது அவர் ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேயத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
பெங்களூரு அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல குர்ணால் பாண்ட்யா முக்கிய பங்கு வகித்தார். அவர் 4 ஓவரில் 17 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் 2-வது முறையாக ஆட்ட நாயகன் விருதை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை குர்ணால் பாண்ட்யா படைத்தார். இதற்கு முன்பு 2017-ல் மும்பை கோப்பையை வென்றபோது அவர் ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.