ஐ.பி.எல்.(IPL)

டி20 போட்டிகளில் 350 ஆவது சிக்சரை பதிவு செய்த எம்.எஸ். தோனி

Published On 2025-05-20 21:25 IST   |   Update On 2025-05-20 21:25:00 IST
  • ஐபிஎல் கிரிக்கெட்டில் 253 சிக்சர்கள் அடித்துள்ளார்.
  • கிறிஸ் கெய்ல் 357 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஐபிஎல் 2025 சீசனின் 62ஆவது போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

சிஎஸ்கே-யின் ஸ்கோர் 13.4 ஓவரில் 137 ரன்னாக இருக்கும்போது பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷிபம் துபே உடன் எம்.எஸ். தோனி ஜோடி சேர்ந்தார்.

16ஆவது ஓவரை ரியான் பராக் வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தை சிக்சருக்கு விளாசினார் எம்.எஸ். தோனி. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 350 சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். இந்த போட்டியில் 17 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் 253 சிக்சர்கள் அடித்துள்ளார். 200 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை எம்.எஸ். தோனி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கிரகி்கெட்டில் கிறிஸ் கெய்ல் 357 சிக்சர்கள் அடித்துள்ளார். ரோகித் சர்மா 280 சிக்சர்களும், விராட் கோலி 272 சிக்சர்களும் அடித்துள்ளனர்.

Tags:    

Similar News