கிரிக்கெட் (Cricket)

நிதிஷ் ரெட்டியை தொடர்ந்து அணியில் இடம்பெறச் செய்ய வேண்டும்: அனில் கும்ப்ளே

Published On 2025-07-11 16:35 IST   |   Update On 2025-07-11 16:35:00 IST
  • நிதிஷ் குமார் ரெட்டி லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக பந்து வீசியதை பார்த்து ஆச்சர்யப் பட்டேன்.
  • சரியான பகுதியில் தொடர்ந்து பந்தை பிட்ச் செய்தார்.

ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டியை, இந்தியா தொடர்ந்து அணியில் இடம் பெறச் செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அனில் கும்ப்ளே கூறியதாவது:-

நிதிஷ் குமார் ரெட்டி லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக பந்து வீசியதை பார்த்து ஆச்சர்யப் பட்டேன். சரியான பகுதியில் தொடர்ந்து பந்தை பிட்ச் செய்தார். லெக் சைடு ஷார்ட் பால் மூலம் விக்கெட் கிடைத்தது கிஃப்ட். மாற்றாக அவர் ஒழுக்கமாக பந்து வீசினார்.

ஆஸ்திரேலியாவில் விக்கெட் அதிக அளவில் வீழ்த்தவில்லை என்றாலும், நன்றாக பேட்டிங் செய்தார். சதமும் அடித்தார். இதுபோன்ற வீரர் பார்ட்னர்ஷிப்பை உடைக்க அணிக்கு தேவை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்து, அதே நேரத்தில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த இதுபோன்ற வீரர் அவசியம்.

ஒரே ஸ்பெல்லில் ஏறக்குறைய 14 ஓவர்கள் வீசினார். இது அவருடைய உடற்தகுதி மற்றும் கட்டுப்பாட்டை வெளிப்படுத்துகிறது. சிறந்த பீல்டர், இளமையானவர். சதம் அடிக்கக் கூடியவர். அடிக்கடி நீக்குவது மற்றும் மாற்றுவது ஆகியவற்றை விட்டுவிட்டு, அவரை தொடர்ந்து அணியில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

லார்ட்ஸ் போட்டியில் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களை நிதிஷ் குமார் அவுட்டாக்கி, அணிக்கு உத்வேகம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News