null
4வது டெஸ்ட்: கருண் நாயருக்கு இந்திய அணியில் இடமுண்டா? - உதவி பயிற்சியாளர் விளக்கம்
- முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.
- முதல் டெஸ்டில் சாய் சுதர்சன் 3ஆவது இடத்தில் களம் இறங்கினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.
முதல் டெஸ்டில் சாய் சுதர்சன் 3ஆவது இடத்தில் களம் இறங்கினார். அவர் சிறப்பாக விளையாடாததால், கருண் நாயர் 3ஆவது இடத்தில் களம் இறக்கப்பட்டார். ஆனால் 20 முதல் 30 என ரன்கள் அடிக்கிறார். பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை.
இதனால் கருண் நாயர் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கு தேவையா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட், "கருண் நாயர் சிறப்பான பங்களிப்பைத் தருவதாக நாங்கள் உணர்கிறோம். 3-வது இடத்தில் களமிறங்கும் வீரரிடமிருந்து அதிக ரன்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனாலும், நமக்குப் பலனளிக்காத சிறிய விஷயங்கள் சரிசெய்யப்படும்"என்று தெரிவித்தார்.