கிரிக்கெட் (Cricket)
டி20-யில் அதிவேகமாக 1000 ரன்கள்: சூர்யகுமார் யாதவ் சாதனையை முறியடித்தார் அபிஷேக் சர்மா
- அபிஷேக் சர்மா 528 பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார்.
- சூர்யகுமார் யாதவ் 573 பந்துகளில் ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.
இந்திய டி20 அணியின் தொடக்க வீரராக களம் இறங்கும் அபிஷேக் சர்மா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய இலக்கு. பவர்பிளேயை பயன்படுத்தி அதிரடியாக ரன்குவித்து வருகிறார்.
இன்றைய போட்டியில் 7 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் அடித்தார். இதன்மூலம் 29 போட்டிகளில் 528 பந்துகளை சந்தித்து ஆயிரம் ரன்களை தொட்டார். இதனைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சூர்யகுமார் யாதவ் சாதனையை முறியடித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் 573 பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார். பில் சால்ட் 599 பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார். மேக்ஸ்வெல் 604 பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார்.