கிரிக்கெட் மீது அதீத காதல்..!- மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா
- மந்தனாவின் தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. இவர் மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர். சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் மந்தனா முக்கிய பங்காற்றினார்.
இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.
மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரின் திருமணம் கடந்த 23-ம் தேதி சாங்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடப்பதாக இருந்த நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. இதைதொடர்ந்து பலாஸ் உடன் இருக்கும் திருமண புகைப்படங்களை மந்தனா நீக்கினார்.
தொடர்ந்து, திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா, தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில்," என் வாழ்க்கையில் கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் அதிகம் காதலிக்கவில்லை. இந்திய ஜெர்ஸியை அணிந்து நாட்டுக்காக விளையாடும்போது, எல்லா கஷ்டங்களும் மறந்துவிடும்!" என்றார்.