கிரிக்கெட் (Cricket)
null

லண்டன் ஓவல் டெஸ்டில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-2 என சமன் செய்தது

Published On 2025-08-04 16:27 IST   |   Update On 2025-08-04 16:31:00 IST
  • முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி இன்று 3 விக்கெட் வீழ்த்தினார்.
  • இந்தியா 6 ரன்னில் வெற்றி பெற்றது.

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி நாளான இன்று 5ஆவது நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட் இருந்தது.

ஆட்டம் தொடங்கியதும் யார் பெற்றி பெறுவார் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரில் பிரசித் கிருஷ்ணா 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

அடுத்த ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் ஸ்மித் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் பிரசித் கிருஷ்ணா 4 ரன்கள் விட்டுக்கொடுத்தார். சிராஜ் வீசிய 2ஆவது ஓவரில் ஓவர்ட்டனை சிராஜ் வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து 354 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது.

20 ரன்கள் தேவை என்ற நிலையில் அட்கின்சன் உடன் ஜோஷ் டாங்க் ஜோடி சேர்ந்தார். 81 ஆவது ஓவரில் டாங்க் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் இங்கிலாந்து ரிவ்யூ கேட்டது. ரிவ்யூவில் பந்து ஸ்டம்பை தாக்காமல் வெளியில் சென்றது. இதனால் டாங்க் தப்பித்தார். இந்த விக்கெட்டை வீழ்த்தினால் இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிடும். ஏனென்றால் கிறிஸ் வோக்ஸ் தோள்பட்டை காயத்தால் களம் இறங்கவில்லை. ஒருவேளை பேட்டிங் செய்ய வந்தாலும் ரன் அடிப்து கடினம்.

அட்கின்சன்- டாங்க் ஜோடி சமாளித்து விளையாடியது. சிராஜ் அபாரமான பந்து வீசினார். 80 ஓவர்கள் முடிந்த நிலையிலும் இந்தியா புதுப்பந்து எடுக்காமல் பழைய பந்தை பயன்படுத்தியது. சிராஜ் சிறப்பாக பந்து ஸ்விங் செய்தது.

82 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. 83 ஆவது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் டாங்க் க்ளீன் போல்டானார். இதனால் இங்கிலாந்து 9 விக்கெட்டை இழந்தது. 17 ரன்கள் தேவைப்பட்டது.

தோள்பட்டை கை காயத்துடன் கிறிஸ் வோக்ஸ் களம் இறங்கினார். 84 ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். 2ஆவது பந்தில் அட்கின்சன் சிக்ஸ் அடித்து பரபரப்பை கூட்டினார். கடைசி பந்து அட்சின்சன் பேட்டில் படவில்லை. ஆனாலும் பை (Bye) மூலம் ஒரு ரன் ஓடினர். ஜுரெல் ரன்அவுட் செய்ய தவறினார்.

இதனால் 10 ரன்கள் தேவைப்பட்டது. 84ஆவது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். முதல் பந்தில் அட்கின்சன் 2 ரன்அடித்தார். இதனால் 8 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரின் கடைசி பந்தில் அட்கின்சன் ஒரு ரன் எடுத்தார்.

இதனால் இங்கிலாந்துக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. சிராஜ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் அட்கின்சன் க்ளீன் போல்டானார். இதனால் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-2 என சமன் செய்தது.

2ஆவது இன்னிங்சில் சிராஜ் 5 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

Tags:    

Similar News