2வது டெஸ்டில் ஜோ ரூட் அபார சதம்: நியூசிலாந்து வெற்றிபெற 583 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
- இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
- அந்த அணியின் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார். இது அவரது 36வது சதமாகும்.
வெல்லிங்டன்:
நியூசிலாந்து- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து ஹாரி ப்ரூக் (123) சதத்தால் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 125 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து, 155 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. பென் டக்கெட் 92 ரன்னும், பெத்தேல் 96 ரன்னும் எடுத்தனர். ஹாரி புரூக் 55 ரன்னில் வெளியேறினார்.
சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து அசத்தினார். இது இவரது 36வது சதமாகும். ஜோ ரூட் 106 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பென் ஸ்டோக்ஸ் 49 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளானர்.
இதையடுத்து, 583 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.