கிரிக்கெட் (Cricket)

பும்ரா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்கள் குவித்து ஆல்அவுட்

Published On 2025-06-22 20:24 IST   |   Update On 2025-06-22 20:24:00 IST
  • இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது
  • ஹாரி ப்ரூக் 99 ரன்னில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிலையில் தவறவிட்டார்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. சிறப்பாக விளையாடிய ஒல்லி போப் 106 ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ஹாரி ப்ரூக் 99 ரன்னில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிலையில் தவறவிட்டார்.

இறுதியில் ஜேமி ஸ்மித் 40 ரன்களும் வோக்ஸ் 38 ரன்களும் அடிக்க 465 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது.

இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

இதனையடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆடவுள்ளது.

Tags:    

Similar News