இங்கிலாந்து அணி 374 ரன் இலக்கை எட்டி வெற்றி பெறுவது கடினம் - ஜெய்ஸ்வால்
- லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 371 ரன் இலக்கை எளிதாக எடுத்தது.
- ஓவல் ஆடுகளத்தில் 374 ரன் இலக்கை எடுப்பது கடும் சவாலானது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன் எடுத்தது. 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன் னிங்சில் 396 ரன் குவித்தது. இதனால் இங்கிலாந்துக்கு 374 ரன் இலக்காக இருந்தது.
ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். அவர் 118 ரன னும், ஆகாஷ் தீப் 66 ரன்னும், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 53 ரன்னும் எடுத்தனர். ஜோஷ் டங் 5 விக்கெட்டும், அட்கின்சன் 3 விக்கெட்டும், ஓவருடன் 2 விக் கெட்டும் கைப்பற்றி னார்கள்.
374 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3- வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன் எடுத்து இருந்தது.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து வெற்றிக்கு மேலும் 324 ரன் தேவை. கைவசம் 8 விக்கெட் உள்ளது. தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்தால் கிறிஸ் வோக்ஸ ஆடமாட்டார்.
லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 371 ரன் இலக்கை எளிதாக எடுத்தது. இதனால் அந்த அணி இந்த இலக்கை எடுக்கும் நிலை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்த ஆடுகளத்தில் 374 ரன் இலக்கை எடுப்பது கடும் சவாலானது. இந்திய பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்று தொடரை சமன் செய்வார்களா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி 374 ரன் இலக்கை எடுப்பது எளிதாக இருக்காது என்று சதம் அடித்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் கூறி உள்ளார். நேற்றைய போட்டி முடிந்த பிறகு அவர் நிருபர்களிடம் இது தொடர்பாக கூறியதாவது:-
இந்த ஆடுகளத்தில் ரன் எடுப்பது சற்று கடினமானது. 4-வது நாளில் 374 ரன் இலக்கை துரத்துவது இங்கிலாந்து அணிக்கு எளிதாக இருக்காது. நாங்கள் நேர்த்தியாக பந்து வீசுவோம். இதனால் பேட்டிங் செய்வது கடினமானது. வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இங்கிலாந்தில் இது மாதிரியான ஆடுகளத்தில் விளையாடுவதை எதிர் பார்த்தேன். மனதளவில் நான் தயாராக இருந்தேன். நான் எனது பேட்டிங்கை ரசித்தேன். இந்த சதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து நிலையாக விளையாடுவதை விரும்புகிறேன். எனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி கொண்டேன்.
இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.