கிரிக்கெட் (Cricket)

ரோவ்மன் பவல் நீக்கம்.. வீரர்களுக்கான அநீதி.. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்த பிராவோ

Published On 2025-04-01 16:05 IST   |   Update On 2025-04-01 16:05:00 IST
  • டி20 அணியின் கேப்டனாக இருந்த ரோவ்மன் பவலுக்குப் பதிலாக ஷாய் ஹோப் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஷாய் ஹோப் ஏற்கெனவே ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கிரெய்க் பிராத்வைட் ராஜினாமா செய்துள்ளார். அதே நேரத்தில், டி20 அணியின் கேப்டனாக இருந்த ரோவ்மன் பவலுக்குப் பதிலாக ஷாய் ஹோப் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ஷாய் ஹோப் ஏற்கெனவே ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், டி20 அணியின் கேப்டனாக இருந்த ரோவ்மன் பவலை நீக்கி ஷாய் ஹோப்பை கேப்டனாக நியமித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை அந்த அணியின் முன்னாள் கேப்டன் டுவைன் பிராவோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பிராவோ கூறியதாவது:-

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் வீரர்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்கின்றன என்பதை கரீபியன் மக்களுக்கும் கிரிக்கெட் உலகிற்கும் மீண்டும் ஒருமுறை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.

ஒரு முன்னாள் வீரராகவும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் ரசிகராகவும் என்னைப் பொறுத்தவரையில் இது மிக மோசமான முடிவுகளில் ஒன்றாகும்.

நமது டி20 அணி 9-வது இடத்தில் இருந்தபோதும் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டு ரோவ்மன் பவல், அணியை தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேற உதவினார். ஆனால் தற்போது அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளீர்கள். இது போன்ற ஒரு கேப்டனை நீக்கள் நீக்கியதற்கு என்ன காரணத்தை கூறுவீர்கள்.

என்று பிராவோ விமர்சித்துள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு முதல் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பவல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, இதுவரை 37 போட்டிகளில் விளையாடி 19 வெற்றிகள் 17 தோல்விகளைச் சந்தித்துள்ளது. மேற்கொண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலும் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News