கிரிக்கெட் (Cricket)
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக சதம் விளாசிய துருவ் ஜூரல்
- முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி 532 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
- 3-ம் நாள் முடிவில் இந்தியா ஏ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 403 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி 532 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து இந்தியா ஏ அணி களமிறங்கியது. 3-ம் நாள் முடிவில் இந்தியா ஏ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 403 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் 86 ரன்களுடனும் துருவ் ஜூரல் 113 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல்தர கிரிக்கெட்டில் துருவ் ஜூரல் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும்.