கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: 13-வது அணியாக தகுதி பெற்ற கனடா

Published On 2025-06-23 09:52 IST   |   Update On 2025-06-23 09:52:00 IST
  • 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
  • இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கிறது.

ஆன்டாரியோ:

20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் 4 அணிகள் இடையிலான அமெரிக்க மண்டலத்துக்கான தகுதி சுற்று கனடாவின் ஆன்டாரியோ நகரில் நடக்கிறது.

இதில் நடந்த ஒரு ஆட்டத்தில் கனடா அணி, பஹாமாசை 57 ரன்னில் சுருட்டியதுடன், அந்த இலக்கை 5.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்த கனடா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்ததுடன், டி20 உலகக் கோப்பை போட்டிக்கு 13-வது அணியாக தகுதி பெற்றது.

Tags:    

Similar News