கிரிக்கெட் (Cricket)
null

டக்அவுட்டில் இருந்து தப்பிவிட்டேன்: முதல் பந்தில் ரன் அடித்த விராட் கோலியின் ரியாக்ஷன்

Published On 2025-10-25 14:18 IST   |   Update On 2025-10-25 14:19:00 IST
  • பெர்த் மற்றும் அடிலெய்டு போட்டிகளில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
  • ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்து டக்அவுட் ஆகி விமர்சனத்திற்கு உள்ளானார்.

ஆஸ்திரேலியா- இந்தியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியிலும், அடிலெய்டில் நடைபெற்ற 2ஆவது போட்டியிலும் விராட் கோலி ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆவார்.

இதனால் விராட் கோலி விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில்தான் 3ஆவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது. சுப்மன் கில், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுப்மன் கில் 26 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். அவரை மைதானத்தில் இருந்து ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்றனர்.

ஹசில்வுட் வீசிய ஓவரை விராட் கோலி எதிர்கொண்டார். முதல் பந்திலேயே ஒரு ரன் எடுத்தார். வேகமாக ஒரு ரன் எடுத்த நிலையில், கையை தூக்கி அப்பாடா ஒரு ரன் அடித்துவிட்டேன் என்பதுபோல், காண்பித்தார். ரசிகர்கள் மீண்டும் ஆரவாரம் எழுப்பி விராட் கோலிக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

Tags:    

Similar News