கிரிக்கெட் (Cricket)

104 ஆண்டுகளுக்குப் பிறகு.. வரலாற்றில் இடம்பெற்ற பெர்த் டெஸ்ட் போட்டி

Published On 2025-11-22 17:05 IST   |   Update On 2025-11-22 17:05:00 IST
  • ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட்83 பந்தில் 123 ரன்கள் குவித்தார்.
  • ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து விளையாடும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட், கார்ஸ் 3 விக்கெட், ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டும் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில் விளையாடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிராவிஸ் 69 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.

இதன் மூலம் 104 ஆண்டுகளுக்குப் பிறகு AUS vs ENG ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது.

இரு நாட்களுக்குள் ஆஷஸ் போட்டி முடிவுக்கு வருவது வரலாற்றில் இது 6-வது முறை மட்டுமே. 1888-ல் 3 முறை, 1890, 1921 ஆண்டுகளில் தலா ஒரு முறை இவ்வாறு நடந்துள்ளன.

Tags:    

Similar News