கிரிக்கெட் (Cricket)

டிம் டேவிட் அதிரடி: முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Published On 2025-08-10 22:33 IST   |   Update On 2025-08-10 22:33:00 IST
  • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 178 ரன்கள் குவித்தது.
  • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 161 ரன்களை மட்டுமே எடுத்தது.

டார்வின்:

தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி டார்வினில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டிம் டேவிட் 52 பந்தில் 83 ரன் குவித்தார்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் மபாகா 4 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 179 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

தொடக்க ஆட்டக்காரரான ரிக்கெல்டன் தனி ஆளாகப் போராடினார். அரை சதம் கடந்து 71 ரன்னில் அவுட்டானார். ஸ்டப்ஸ் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

ஆஸ்திரேலியா சார்பில் ஜோஷ் ஹேசில்வுட், பென் துவார்ஷியூஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது டிம் டேவிட்டுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News