கிரிக்கெட் (Cricket)

AUS Vs SA ODI: 3 வீரர்கள் அதிரடி சதம்... 431 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா சாதனை

Published On 2025-08-24 13:35 IST   |   Update On 2025-08-24 13:35:00 IST
  • 250 ரன்கள் அடித்தநிலையில் தான் ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது.
  • அதிரடியாக விளையாடிய கிரீன் 47 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார்.

தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளது. அந்த 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2 - 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை கைப்பற்றியது.

இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய ஹெட் - மார்ஸ் ஜோடி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை நாலாப்பக்கமும் சிதறவிட்டனர். அதிரடியாக விளையாடி சதம் அடித்த டிராவிஸ் ஹெட் 103 பந்துகளில் 142 ரன்கள் அடித்து அவுட்டானார்.

250 ரன்கள் அடித்தநிலையில் தான் ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய மார்ஸ் சதம் அடித்து 100 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து கேமரூன் கிரீன் - அலெக்ஸ் கேரி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கிரீன் 47 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 431 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. 

கிரீன் 118 ரன்களுடனும் அலெக்ஸ் கேரி 50 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

Tags:    

Similar News