கிரிக்கெட் (Cricket)
null

அனைத்து பரிசோதனைகளையும் நிறுத்துங்கள்: இந்திய அணிக்கு ஆகாஷ் சோப்ரா அட்வைஸ்

Published On 2025-11-09 19:03 IST   |   Update On 2025-11-09 19:04:00 IST
  • டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இந்தியா இன்னும் 10 போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது.
  • இதனால் இந்திய அணி பரிசோதனை என்ற பெயரில் வீரர்களை அடிக்கடி மாற்றக் கூடாது.

இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் மற்றும் கடைசி போட்டி மழையால் கைவிடப்பட்டது. மற்ற 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இந்த ஐந்து போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் காம்பினேஷன் மாறிக் கொண்டே இருந்தது. இந்த அணி நிர்வாகம் இதை பரிசோதனை எனக் குறிப்பிடுகின்றது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இந்தியா 10 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது. இதனால் அனைத்து பரிசோதனைகளும் நிறுத்தப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

இது பரிசோதனை கட்டமாகும். இந்த பரிசோதனைகள் நின்றுவிடும் என்று நான் நம்புகிறேன். இந்திய அணி பரிசோதனை கட்டத்தில் இருக்கிறது. இதனால் யாரைம் டாப் வரிசை அல்லது கீழ் வரிசையில் விளையாட வைக்க முடியும், விளையாட அல்லது யாரையும் நீக்க முடியும் என்று சொல்கிறார்கள். வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும்போது, அவர்கள் பரிசோதனை செய்யலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

எனினும், சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக 5 பேட்டிகளிலும் விளையாட இருக்கிறது. அது பரிசோதனை முடிவுக்கு நேரம் என்று நினைக்கிறேன். நாம முடிச்சிட்டோம்னு நினைக்கிறேன். இதற்கு அப்புறம் நீங்க அதிகமாக பரிசோதனை பண்ண முடியாது. நீங்க செய்யக் கூடாது. ஏனெ்றால், உலகக் கோப்பை பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.

இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.

Tags:    

Similar News