கிரிக்கெட் (Cricket)
10 ஆண்டு கால ரகானேவின் சாதனையை முறியடித்த மார்க்ரம்
- இந்த போட்டியில் 2 இன்னிங்சுகளையும் சேர்த்து மொத்தமாக 9 கேட்சுகளை மார்க்ரம் பிடித்துள்ளார்.
- 2015-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 8 கேட்சுகளை ரகானே பிடித்திருந்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் 2 இன்னிங்சுகளையும் சேர்த்து மொத்தமாக 9 கேட்சுகளை தென் ஆப்பிரிக்கா வீரர் ஏய்டன் மார்க்ரம் பிடித்துள்ளார். இதன்மூலம் ஒருடெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த ஃபீல்டர் என்ற 10 ஆண்டு கால ரகானேவின் சாதனையை மார்க்ரம் முறியடித்தார்.
2015-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 8 கேட்சுகளை ரகானே பிடித்திருந்தார். அதற்கு முன்பு கிரேக் சேப்பல் 1974-ம் ஆண்டு 7 கேட்சுகளை பிடித்திருந்தார். அவரது சாதனையை 40 ஆண்டுகளுக்கு பிறகு ரகானே முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.